Grade 1 Admission Guidelines 2026 - Sri Lanka
தரம் 1 மாணவர் அனுமதி தொடர்பான வழிகாட்டுதல்கள் 2026 - இலங்கை
[AdSense Ad Space - 728x90 or Responsive]
▶
1.0 Rules and Regulations for Admitting Children to Grade 1 / தரம் ஒன்றிற்கு பிள்ளைகளை அனுமதிப்பது தொடர்பான விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
Before completing the application form, please read the following rules and information carefully.
விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்த முண்ணர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் தகவல்களை நன்றாக வாசிக்கவும்.
සිංහල:
2.1 2026 ජනවාරි මස 31 දිනට ළමයාගේ වයස අවුරුදු 05 ක් සම්පූර්ණ විය යුතු ය. මේ සඳහා උප්පැන්න සහතිකය ඉදිරිපත් කළ යුතු අතර, උප්පැන්න සහතිකය නොමැති නම් ඒ වෙනුවට උපන් දිනය සනාථ කිරීමට උප්පැන්න විවාහ හා මරණ පිළිබඳ රෙජිස්ට්රාර් ජනරාල්වරයා හෝ බලය පවරන ලද අදාළ දිස්ත්රික් රෙජිස්ට්රාර් හෝ අතිරේක දිස්ත්රික් රෙජිස්ට්රාර්වරයෙකු විසින් නිකුත් කරනු ලබන අනුමාන වයස් සහතිකයක් ඉදිරිපත් කළ යුතු ය.
தமிழ்:
1.1 ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு பிள்ளையின் வயது 05 வருடங்கள் பூர்த்தியாகி இருத்தல் வேண்டும். இதற்காக பிறப்புச் சான்றிதழ் முன்னிலைப்படுத்தப்படல் வேண்டும் என்பதுடன், பிறப்புச் சான்றிதழ் இல்லை எனின், அதற்குப் பதிலாக பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்காக பிறப்பு, விவாகம் மற்றும் இறப்பு பதிவாளர் நாயகம் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட உரிய மாவட்ட பதிவாளர் அல்லது மேலதிக மாவட்ட பதிவாளரால் வழங்கப்பட்ட அனுமான வயதுச் சான்றிதழை முன்னிலைப்படுத்த வேண்டும்.
සිංහල:
2.2 2026 ජනවාරි 31 දිනට වයස අවුරුදු 06 හෝ 06 ට වැඩි ළමයින් ඇතුළත් කළ හැක්කේ වයස අවුරුදු 06 ට අඩු, සුදුසුකම් සපුරා ඇති ළමයින් සියලු දෙනා ම ඇතුළත් කර ගැනීමෙන් පසුව ය.
தமிழ்:
1.2 2026 ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு வயது 06 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளை அனுமதிக்க முடிவது வயது 06 வருடங்களை விடக் குறைவான சகல தகைமைகளையும் பூர்த்தி செய்துள்ள பிள்ளைகளையும் அனுமதித்ததன் பின்னராகும்.
අවශ්ය ලේඛන:
• උප්පැන්න සහතිකය (මූලික අවශ්යතාවය)
• උප්පැන්න සහතිකය නොමැති නම්: අනුමාන වයස් සහතිකය
• රෙජිස්ට්රාර් ජනරාල්වරයා විසින් නිකුත් කරන ලද සහතිකය
• දිස්ත්රික් රෙජිස්ට්රාර් විසින් නිකුත් කරන ලද සහතිකය
தேவையான ஆவணங்கள்:
• பிறப்புச் சான்றிதழ் (அடிப்படைத் தேவை)
• பிறப்புச் சான்றிதழ் இல்லை எனின்: அனுமான வயதுச் சான்றிதழ்
• பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ்
• மாவட்ட பதிவாளரால் வழங்கப்பட்ட சான்றிதழ்
▶
3.1 Student Numbers per Class / ஒரு வகுப்பிற்கான மாணவர் எண்ணிக்கை
For a parallel class in Grade 1, 35 children will be selected through an interview, and 5 children will be selected from the children of the members of the Tri-Forces and Police who were engaged in operational duties. Accordingly, the number of students in a class is 40.
தரம் ஒன்றிற்கான சமாந்தர வகுப்பு ஒன்றிற்கு 35 பிள்ளைகள் நேர்முகப் பரீட்சை ஊடாகவும், 5 பிள்ளைகள் யுத்தப் பணிகளில் ஈடுபட்ட முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பிள்ளைகளும் தெரிவு செய்யப்படுவர். அதன் படி ஒரு வகுப்பில் மாணவர்களது எண்ணிக்கை 40 ஆகும்.
▶
3.2 Filling Vacancies in Government-Acquired Schools / அரசினால் சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் வெற்றிடங்களை நிரப்புதல்
When filling vacancies in schools acquired by the government under the Assisted Schools and Training Colleges (Special Provisions) Act No. 05 of 1960 and the Assisted Schools and Training Colleges (Supplementary Provisions) Act No. 08 of 1961, the number of vacancies will be allocated based on the religious ratio of students at the time of acquisition and will be divided among the respective categories. If there are fewer applicants for a quota allocated to a particular religion, the remaining vacancies will be distributed proportionally among the other categories of that religion. If there are no or few applicants for a particular religion, those vacancies will be distributed proportionally among other religions.
1960 இலக்கம் 05 உடைய உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் பயிற்சிக் கல்லூரிகள் (விசேட ஏற்பாடுகள்) மற்றும் 1961 இலக்கம் 08 உடைய உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் பயிற்சிக் கல்லூரிகள் (மேலதிக ஏற்பாடுகள்) ஆகிய சட்டங்களின் பிரகாரம் அரசினால் கையேற்கப்பட்ட பாடசாலைகளில் வெற்றிடங்களை நிரப்பும் போது அப் பாடசாலைகளை கையேற்கும் போது பாடசாலையில் இருந்த சமயம் சார் மாணவர்களின் சதவீதத்தைக் கருத்தில் கொண்டு, வெற்றிடங்களின் எண்ணிக்கையை சமயங்கள் மற்றும் ஒவ்வொரு வகுதியின் அடிப்படையிலும் பிரித்து வேறுபடுத்தப்படும். ஏதேனுமொரு சமயத்தின் ஒரு வகுதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை விட குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருக்கும் பட்சத்தில் குறித்த வெற்றிடங்கள் அந்த சமயத்திற்குரிய ஏனைய வகுதிகளிடையே சதவீத அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். ஏதேனுமொரு சமயத்திற்குரியதாக விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அல்லது குறைவாக இருக்கும் பட்சத்தில் அல்லது அவ் வெற்றிடங்கள் சதவீத அடிப்படையில் ஏனைய சமயங்களிடையே பகிர்ந்தளிக்கப்படும்.
▶
3.3 Parents Residing Separately / பெற்றோர் தனித்தனியே வசித்தல்
If the parents are not living in the same place but are not legally separated, and if it is proven through documents that they have initiated legal proceedings for separation, the residence of the applicant (mother or father) will be considered as the child's place of residence.
பெற்றோர் ஒரே இடத்தில் வசிக்கவில்லை எனில் அவர்கள் சட்டரீதியாக பிரியாதவர்களாக இருந்தாலும், அவர்கள் சட்டரீதியாக பிரிவதற்காக நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளவர்களாக இருப்பின், அது தொடர்பாக உரிய ஆவணங்களூடாக உறுதிப்படுத்தப்படுமிடத்து விண்ணப்பப் படிவத்தை முன்னிலைப்படுத்தியுள்ளவரது (தாய் அல்லது தந்தை) வதிவிடம், பிள்ளை வதியும் இடமாக கருத்தில் கொள்ளப்படும்.
0 Comments